தொப்பையை குறைக்கனுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்க
உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன.
ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமான விடயமாக காணப்படுகின்றது.
நம்மில் பலருக்கும் உணவை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதான காரியமாக இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.
எனினும் சில எளிய வழிமுறைகளின் மூலம் நம் உடல் எடையை எளிதாக குறைப்பதற்காக எந்த பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தொப்பையை குறைக்க...
உடல் எடையை குறைப்பதில் பூண்டு மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதில் விளைவைக் காட்டுகிறது.
தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம். இது தவிர, காய்கறிகள், சாலடுகள் மற்றும் சூப்களில் சேர்த்தும் சாப்பிடலாம். இவ்வாறு தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை கணிசமாக குறைவதை குறைவதை அவதானிக்க முடியும்.
உடலில் வலி இருந்தாலோ, வயிறு உப்பச பிரச்சனை இருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க விரும்பினாலோ இஞ்சியை உட்கொள்ளலாம்.இஞ்சியின் கொழுப்பை எரிக்கும் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இந்த தண்ணீரை குடித்தால் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் எடை இழப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இலவங்கப்பட்டை பொடியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து இந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையத் தொடங்குகிறது.
இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை தொடர்பான நன்மைகளை வழங்குகிறது.இது செரிமான பிரச்சினைகளை சீர் செய்வதிலும் தொப்பையை கரைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச் சாறு சேர்த்து அதில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து குடித்தால் உடல் எடை குறைப்புக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
தண்ணீரில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன் எடை இழப்பையும் துரிதப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |