நகம் அடிக்கடி உடைகிறதா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே பெண்கள் தங்களின் நகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும்.
சில பெண்களுக்கு தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் போது பல நாள் பாதுகாப்பாக வளர்த்த நகம் உடைந்துவிடும். இது பெண்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வலி.
இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்டுவதற்கு வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய சில விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வலுவான நகங்களை பெற...
இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, பருத்தி துணியால் அந்த எண்ணெயை நகங்களின் மேல் தொட்டு வைத்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நகங்கள் வலுவாக வளர்வதற்கு துணைபுரியும்.
தினமும் கைகளை எண்ணெய்யில் சிறிது நேரம் வைத்து கொள்வதால் நகங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
பாத்திரங்களை கழுவுதல் போன்ற வேலைகளை செய்வதால் கைகளில் தொற்றுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க கைகளில் பாதுகாப்புக்கு என உறை அணியலாம். மேலும் விரல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து சுத்தமாக வைத்து கொள்வது அவசியமாகும்.
நகம் கடினமாக உள்ளவர்கள் ஆலீவ் ஆயிலைப் பயன்படுத்தினால் நகம் பளபளப்பாக மாறும், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, நகத்தை ஷேப் செய்ய வேண்டியது அவசியம்.
ஷேப் செய்ய விரும்பாதவர்கள், அதிமாக வளரும் நகங்களை மாத்திரம் வெட்டிவிடலாம். அளவுக்கு மீறி வளர்வதும் நகம் உடைவதற்கு காரணமாக அமைகின்றது.
நகங்களுக்கும் சுவாசிக்கும் தன்மை இருப்பதால் அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
அப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் சரியான முறையில் நீக்குவது அவசியம். நெயில் பாலிஷ் நீக்குவதற்கு தரமான பிரான்டுகளை பயன்படுத்துவது முக்கியம், இல்லையேல் நகங்கள் நிறம் மாறி வலுவிலக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பது நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாத விடயமாகும்.
நகங்கள் நீளமாகவும் வெண்மையாகவும் இருப்பதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 6 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
வைட்டமின்-ஈ மற்றும் கால்சியம் அதிகம் காணப்படும் உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான நகங்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |