குழந்தைகளின் தலையில் இளநரை முடிகள் இருக்கா? அப்போ இந்த மருந்தை தடவுங்க
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்ற தலைமுடி பிரச்சினைகளில் இளநரையும் ஒன்று.
இது ஆரோக்கியம் குறைப்பாடு, பரம்பரை, மருந்துகள் பாவனை மற்றும் தேவையற்ற வாசனை பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றது.
நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய நரையை தவிர்க்க முடியாது. ஆனால் இளவயதில் வரக்கூடிய நரையை தடுக்க இயற்கையான வழிமுறைகள் உண்டு.
அந்த வகையில் சிறிய வயதில் இருக்கும் சில குழந்தைகளுக்கு இளநரை இருக்கும். இதனை மருந்துகளை வைத்து சரிச் செய்வதை விட வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு சரிச் செய்து கொள்ளலாம்.
அப்படியாயின் இளநரைக்கு அப்படி என்ன மருந்து செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
நெல்லி தைலம்
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் சாறு - 100 மில்லி
- தேங்காயெண்ணெய் - 100 மில்லி
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தைலம் செய்முறை
முதலில் நெல்லிக்காய்களை எடுத்து அதன் கொட்டைகளை நீக்கி துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அதன் சாற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நெல்லிசாற்றையும் சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்கவும்.
நெல்லி சாறு எண்ணெய் தனித்தனியாக பிரிந்து சேரும். இந்த சலசலப்பு அடங்கும் போது கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் சலசலப்பு அடங்கிய பின்னர் அடுப்பை அனைத்து விட்டு காட்டன் துணியால் கலவையை வடிக்கட்டி கொள்ளவும்.
இதனை தண்ணீர் அல்லாத போத்தல்களில் ஊற்றி வைக்கவும்.
குளிப்பதற்கு முன்னர் தலையில் தேய்ச்சி மசாஜ் செய்து விட்டு பின்னர் கழுவினால் காலப்போக்கில் இளநரை மாறி முடி பார்ப்பதற்கு கருப்பாக தெரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |