இளம் வயதிலேயே நரைமுடி அதிகமா இருக்கா? அப்ப இதை மட்டும் வாரத்துக்கு 2 முறை போடுங்க
பொதுவாக வயது அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும்.
ஆனால் தற்போது எல்லாம் முன்கூட்டியே முடி நரைக்க ஆரம்பித்து விட்டது.
இதனை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்கலாம்.இது தவிர ஒருசில ஹேர் பேக்குகளை போடுவதன் மூலமும் நரைமுடி வெளியே தெரிவதைக் குறைக்கலாம்.
இப்போது நரைமுடியைக் குறைக்க உதவும் ஹேர் பேக் குறித்து காண்போம்.
உருளைக்கிழங்கு ஹேர் பேக்
உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
இது முடியை கருமையாக்க உதவி புரிகிறது.
இந்த ஹேர் பேக்கை போட, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பிறகு இறக்கி, உருளைக்கிழங்கை நீக்கிவிட்டு, அந்நீரை குளிர வைக்க வேண்டும்.
பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி முடியை அலச வேண்டும்.