நரைமுடி கருப்பாக மாற - 7 நாட்கள் இதை தொடர்ந்து போடுங்க போதும்
தலையமுடி பிரச்சனைகளுக்கு எப்போதுமே விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள், ஆன்லைன் ஹேர் டைசுகள், சலூன் டிரிட்மெண்ட்கள் இவை அனைத்தும் தற்காலிக முடிவுகளையே தரும்.
பெரும்பாலானவர்களுக்கு, இவை மூலம் எதிர்பார்த்த விளைவுகள் கிடைப்பதே இல்லை இனி ஹேர் டை, சாயம், ரசாயனப் பொருட்கள் எதுவும் தேவையில்லை.
உங்கள் வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய ஒரு ரகசிய எண்ணெய், உங்கள் தலையில் உள்ள நரைமுடியை வெறும் 7 நாட்களில் கருப்பாக மாற்றும் அதிசயம் செய்யும்.
நரைமுடியை கருப்பாக மாற்றும் எண்ணெய்
முதலில் வெந்தயம் இரண்டு டீஸ்பூன் கருஞ்சீரகம் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு ஒரு டீஸ்பூன் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி தேங்காய் எண்ணெய் 200 எம்எல் போன்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் லேசாக வறுக்கவும்.அதில் கருஞ்சீரகமும் சேர்த்து வறுக்கவும். சிறிது நேரம் கழித்து கருப்பு மிளகையும் சேர்க்க வேண்டும்.
மூன்றையும் நன்கு கிளறி மிதமான தீயில் வறுக்கவும்.வறுத்தவுடன் அடுப்பை அணைத்து, இந்த மூன்று பொருளையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடியை மிதமான தீயில் வறுக்கவும். வறுத்ததும் தனியாக எடுத்துப் பக்கத்திலே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 200 ml தேங்காய் எண்ணெயை ஊற்றி, கொதிக்கும் வரை சூடாக்கவும்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கியதும், முதலில் வெந்தயம்-கருஞ்சீரகம்-மிளகு பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு வறுத்த நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறியபடி வைக்கவும்.
பின் அடுப்பை அணைத்து, எண்ணெயை 1 மணி நேரம் ஆற விடவும். பிறகு ஒரு தூய வடிகட்டியில் வடித்து எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்த எண்ணெயை வாரத்தில் 3 முறை தலையில் தேய்த்து, 30–60 நிமிடங்கள் விட்டுவிட்டு குளித்து வந்தால், 7 நாட்களில் நரைமுடி கருப்பாக மாறத் தொடங்கும். தொடர்ந்து பயன்படுத்தினால், நரைமுடி நிறைந்து கருப்பாகி, கூந்தல் ஆரோக்கியமாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |