இரசாயன சாயம் எதற்கு? இந்த ஹேர் டை போடுங்க 15 நாட்களில் நரை முடி கருப்பாக மாறும்
இளம் வயதிலே நரை முடி வந்து அதற்காக இரசாயன ஹேர் டை பூசுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இரசாயன சாயம் பூசினால் தலைமுடி முழுமையாக வெள்ளையாகும்.
இயற்கை ஹேர் டை
தலையிலுள்ள வெண்மையான முடிகளை மறைக்கவும், கூந்தலை அழகாக கருமையாக்கவும் பெரும்பாலான பெண்கள் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், சந்தையில் கிடைக்கும் ஹேர் டைகளில் பெரும்பாலும் அம்மோனியா போன்ற இரசாயனங்கள் கலந்திருக்கும்.
இது ஆரம்பத்தில் முடியை கருப்பாக மாற்றும் போல் தோன்றினாலும், தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தல் வெளிர்ந்துவிடும் கருப்பு முடி விரைவில் வெண்மையடையும் இதுபோன்ற இன்னும் பல பிரச்சனைகள் உள்ளது.
வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்க
இதற்கு ஒரு தீர்வாக இயற்கை ஹேர் டை அமையும். இதற்கு வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை தயாரிக்க, மூன்று பொருட்கள் மட்டுமே போதும்.
முதலில் நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன் சீகைக்காய் பொடி – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு இரும்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். தண்ணீர் சூடாகும் போது, அதில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காய் பொடிகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கலவையை சுமார் 4–5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் அடுப்பு அணைத்ததும், அடுப்பில் இருந்து இறக்கி சல்லடை மூலம் வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இந்த இயற்கை டையை மருதாணி தூரிகை அல்லது பல் துலக்குதலால் முடியில் தடவவும். தடவிய பிறகு, 8 மணி நேரம் அப்படியே தலையில் வைத்திருக்கவும்.
பின்னர் மறுநாள், தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு போட்டு குளித்து வாருங்கள் 15 நாட்களில் வித்தியாசம் காண்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |