இனி இரசாயன சாயம் தேவையில்லை - கிராம்பு வாழைப்பழ தோல் இருந்தா போதும்
நரை முடியைக் கருமையாக்க இரசாயன முடிசாயம் பயன்படுத்த தேவை இல்லை. பழம் சாப்பிட்ட பிறகு குப்பையில் வீசும் வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தினால் போதும்.

இயற்கை முடி சாயம்
உங்கள் நரை முடியைக் கருமையாக்க, ஹேர் டை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, வாழைப்பழத் தோல்கள் மற்றும் கிராம்பைப் பயன்படுத்தி நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்.
வாழைப்பழ தோலிலும் கராம்பிலும் இயற்கையாக முடியை கருமையாக்கும் பண்பு உள்ளது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
படிமுறை
வாழைப்பழத் தோல்கள் சில நிமிடங்களிலேயே கருமையாகிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இருப்பினும், இயற்கையான முடிச்சாயம் தயாரிக்க, வாழைப்பழத் தோல்களை 4-5 நாட்களுக்கு வெயிலில் உலர்த்த வேண்டும்.

பின்னர் ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து, அதில் வாழைப்பழத் தோல் மற்றும் சில கிராம்புகளைச் சேர்த்து நன்கு கருமை நிறத்தில் வரும் வரை வறுக்கவும்.
வாழைப்பழத் தோல்களில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவற்றை இரும்புச் சட்டியில் வறுக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியாகி, முடியின் வேர்களில் உள்ள இயற்கையான நிறமியை அதிகரிக்க உதவுகிறது.
கிராம்பும் கூந்தலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். வாழைப்பழத் தோல் மற்றும் கிராம்பை நன்றாக வறுத்த பிறகு, அவற்றை பொடியாக அரைக்கவும்.

அந்தப் பொடியுடன் கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய்,கடுகு எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை நரை முடியின் மீது தடவவும்.
இந்த கலவை நரை முடியை உடனடியாக கருமையாக்கும். வாழைப்பழத் தோல் மற்றும் கிராம்பிலிருந்து தயாரிக்கப்படும் இந்த இயற்கையான முடிச்சாயம், நரைமுடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை அளிப்பது மட்டுமல்லாமல், முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளரவும் ஊக்குவிக்கிறது.