நாதஸ்வரம் சீரியல் நடிகர் காஜா ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்கிறார்?
பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகர் காஜா தற்போது கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகின்றது.
நடிகர் காஜா
சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சில காலத்திற்கு பின்பு காணாமல் போய்விடுகின்றனர். ஆம் வாய்ப்பு கிடைக்காமல் தனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஏதாவது வேலையை பார்த்து வரகின்றனர்.
அந்த வகையில் நாதஸ்வரம் சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் காஜா. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
நாதஸ்வரம் சீரியல்
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான காஜாவின் சொந்த ஊர் தர்மபுரி. சிறுவயதிலிருந்தே அதிகம் சினிமா பார்க்கும் இவருக்கு, நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்துள்ளது.
அத்தருணத்தில் திருமுருகன் நாதஸ்வரம் சீரியலுக்கு ஆடிஷன் பண்ணுவதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கிருந்த கூட்டத்தை பொருட்படுத்தாமல், கலந்து கொண்டுள்ளார்.
தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்த காஜா, அந்த சீரியலுக்கு செலக்ட் செய்யப்பட்டு, தனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்தியுள்ளார்.
குறித்த சீரியலில் கடைசி வரை காஜாவின் காட்சி இருப்பது போன்று கதை அமைத்துள்ளார் திருமுருகன். சீரியலில் நடிக்கும் போது ஒரு குடும்பமாக இருந்த நிலையில், பின்பு வாய்ப்பு கிடைக்காமல் போகவே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
தற்போதும் தனது தன்னம்பிக்கையுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் காஜா தனது சொந்த ஊரில் செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
தான் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டால் தனது குடும்பத்தினை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்ற கேள்வியுடன் அவரது சொந்த ஊரில் வேலை பார்த்து வருகின்றாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |