2030இல் ஏற்படப்போகும் பேராபத்து! நாசா எச்சரிக்கை
காலநிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து விண்வெளி ஆய்வு மையமான நாசா கூர்ந்து கவனித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க கடற்கரையோர நீர் மட்டம் குறித்து நாசா ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதில், 2030 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்கரையோர பகுதிகள் கடுமையான வெள்ளப்பெருக்கை சந்திக்கும் என எச்சரித்துள்ளனர்.
இதற்கு சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் ஏற்படும் மாற்றமும் காரணமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தள்ளாட்டம் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசா விஞ்ஞானிகள், இதனால் பூமி மீதான சந்திரனின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளனர்.
இந்த ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது கடலில் அலைகளின் வேகமும், உயருமும் அதிகரிக்கும். ஏற்கனவே கடற்கரையோர பகுதிகளில் கரைகள் அரிப்பு ஏற்பட்டு கடல்நீர் உட்புகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றனர்.
வரும் காலங்களில் இந்த தன்மை மேலும் அதிகரித்து, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்க கடற்கரையோர பகுதிகளில் கடல் நீரின் மட்டம் அதிகரித்து, நீர் உட்புகுவதும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.
மேலும், உலக நாடுகள் கடற்கரையோர பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.