முதன் முறையாக BLACK HOLE சத்தத்தை வெளியிட்ட நாசா - 200 மில்லியன் ஆண்டின் அபூர்வம்
விண்வெளி மையமான நாசா நிறுவனம் பூமியை போலவே மற்ற கிரகங்களை ஆராய்ச்சி செய்து புகைப்பங்களை வெளியிட்டு வருகிறது.
நாசா வெளியிடும் ஆய்வுகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சமீபத்தில், கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேலக்ஸி தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், வியாழனின் அழகிய புகைப்படமும் வெளியாகி இருந்தன.
இப்படி ஒரு நிலையில், தற்போது Black hole தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆடியோ வடிவிலான விஷயம், அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

அபூர்வமான சத்தம்
அதன்படி, கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த ஆடியோவுடன் கூடிய வீடியோ ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
விண்வெளியின் வெற்றிடத்தில் பொதுவாக ஒலி பயணிக்காது என கூறப்படும் நிலையில், தற்போது நாசா வெளியிட்ட கருந்துளையின் சத்தம் விசித்திரமாக உள்ளது.
அதாவது, சற்று அமானுஷ்யமான வகையில், பேய்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் முனகல் போல இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் தெரிவித்துள்ளனர்.
எனவே சுமார் 200 மில்லியன் ஒளி ஆண் டுகள் தொலைவில் உள்ள கருந் துளையின் இருந்து ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம், அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
The misconception that there is no sound in space originates because most space is a ~vacuum, providing no way for sound waves to travel. A galaxy cluster has so much gas that we've picked up actual sound. Here it's amplified, and mixed with other data, to hear a black hole! pic.twitter.com/RobcZs7F9e
— NASA Exoplanets (@NASAExoplanets) August 21, 2022