அக்ஷயாவிற்கு தனுஷ் வாங்கி கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? மகளை குறித்து கண்கலங்கிய தாய்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷிற்கு, அக்ஷயாவை திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், அக்ஷயாவின் பெற்றோர் முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளனர்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தனது 25 வயதான மகன் தனுஷிற்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.
தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ள காரணத்தினால் நடக்க முடியாமல் இருப்பதுடன், தனது தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகின்றார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் முடிந்த நாளிலிருந்து பலரும் சரமாரியாக கேள்வி கேட்டு குறித்த ஜோடியினை சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
அதாவது குறித்த குடும்பம் பணத்திற்காக திருமணம் செய்து கொடுத்துள்ளதாக பேசப்பட்டது. மேலும் நெப்போலியன் மகனுடன் குறித்த பெண் எப்படி வாழ்வார் என்ற கேள்வியை எழுப்பினர்.
இவை ஒவ்வொன்றிற்கும் நடிகர் நெப்போலியன், மகன் தனுஷ் என அனைவரும் விளக்கமளித்து வரும் நிலையில், குறித்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து பேசியுள்ளனர்.
பெற்றோரின் கருத்து
தனது மகளை தவறாக பேசாதீர்கள் என்று கூறியுள்ள அக்ஷயாவின் தாய், எந்த தாயாவது மகள் மகிழ்ச்சியாக வாழக்கூடாது என்று நினைப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று ஆண்டுகளாக இந்த திருமண பேச்சு நடைபெற்றுள்ளது என்றும் அக்ஷயா சம்மதம் தெரிவித்த பின்னே திருமணத்திற்கு சம்மதம் கூறியதாக கூறியுள்ளார்.
தனக்கு அக்ஷயா இரண்டாவது பெண் என்றும் நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு ஒரு மாதத்திற்கு நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கஷ்டத்துடன் கூறியுள்ளார்.
அவர்கள் பணம் இருப்பவர் போன்று தங்களை உதாசினப்படுத்துவதை யாராவது எங்காவது பார்த்தீர்களா? திருமணத்தில் எங்களை எவ்வளவு மரியாதையாக நடத்தியுள்ளனர் என்று காணொளியில் பார்த்திருப்பீர்கள்.
கல்யாணம் என்பது உடல்சார்ந்த விடயம் மட்டுமில்லை... பாசம், புரிதல் இருந்தாலே போதும். தற்போது அக்ஷயாவை தாங்கள் அதிகமாக மிஸ் பண்ணுவோம் என்று கூறியுள்ளார்.
தனது மகளுக்கு தனுஷ் முதன்முதலாக வாங்கிக் கொடுத்த பரிசு மொபைல் போன் தான் என்றும், தங்களது வீட்டில் சாதாரண போன் தான் வைத்திருந்தோம் என்றும் தனுஷ் குடும்பம் தங்களது வீட்டிற்கு வந்ததும், ஏசி, பெரிய வீடு என எதையும் எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |