மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள்: குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் நெப்போலியன்!
நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகர் நெப்போலியன்
அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் .அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட சதை சிதைவு நோயால் அனைத்தையும் விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
கடந்தவருடம், இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.
அவர்களின் திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷ்யாவுடன் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடிய காணொளியை பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |