மனைவி கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்! காலடியில் கிடப்பேன் என உருகிய நாஞ்சில் விஜயன்
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு அவரது மனைவி பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தான் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை வைஷுலிசா தன்னை ஏமாற்றி விட்டார் என பாலியல் புகார் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு அல்ல. இதனால் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.” என மனைவியுடன் சேர்ந்து காணொளியொன்றை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றிருந்தார்.
நேற்றை தினம் பிறந்த நாளை கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு, விஜே வைஷு பிறந்த நாள் வாழ்த்து கூறிவெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில், எதையும் கண்டுக்கொள்ளாமல் நாஞ்சில் விஜயனின் மனைவி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
குறித்த காணொளியை வெளியிட்டு நாஞ்சில், இந்த அன்பிற்காகத்தான் இத்தனை நாள் நான் ஏங்கித் தவித்தேன் போதுமடி இது எனக்கு வாழ்நாள் முழுவதும் உன் காலடியில் சிக்கித் தவிப்பேன் ... என உருக்கமான பதிவொன்றை போட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |