நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிக்க சதியா? பேட்டியில் வெளியிட்ட பல உண்மைகள்
சின்னத்திரை நடிகரான நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியாவுடன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர் ஆவார்.
இவர் சமீபத்தில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது திருமணத்தில் தாய் இல்லாததைக் குறித்தும், தனது திருமண வாழ்க்கை குறித்தும் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
இவர் கொரோனா லாக்டவுன் காலத்தில், வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்தை கூறி சிக்கலில் சிக்கினார். மேலும் டிக் டாக் சூர்யா தேவியுடனும் நடந்த சர்ச்சை இவரை காவல்நிலையம் வரை கொண்டு சென்றது. பின்பு கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்கு டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாகவும் இவர் மீது புகார் எழுந்தது.
இவ்வாறு பல சர்ச்சையில் சிக்கினாலும் தனது துறையில் கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் மரியா என்ற பெண்ணை திருமணம் செய்த இவர் ஆஹா கல்யாணம் என்ற தலைப்பில் சினிஉலகம் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |