மனைவியின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்திய நாஞ்சில் விஜயன்! படு வைரலாகும் காணொளி
உலகத்தை இரட்சிக்க வந்த ஜீசஸ் பிறந்த அதே நாளில் என்னை ரட்சிக்க வந்த என்னவளின் பிறந்தநாள் கூட வாழ்த்துக்கள் மரியா... என குறிப்பிட்டு தனது மனைவியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி நாஞ்சில் விஜயன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன்
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர்.
நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் திருநங்கை வைஷுலிசா கிளப்பிய சர்ச்சையால் நாஞ்சில் விஜயன் இணையத்தில் பேசுபொருளாக மாறியிருந்தார்.

தற்போது இந்த சர்ச்சை ஓய்ந்தலும் அவ்வப்போது நாஞ்சில் விஜயன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ஏதாவது சர்ச்சையாக குறிப்பிடுவதை வைஷுலிசா வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் மனைவி, மற்றும் குழந்தையின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நாஞ்சில் விஜயன் மனைவியின் பிறந்தநதளை நெருங்கி நட்பு வட்டாரத்துடன் அசத்தலாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |