நாஞ்சில் விஜயன் திருநங்கை புகார் - கொந்தளித்த செய்தியாளர் செய்யாறு பாலு
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை கொடுத்த புகாருக்கு செய்தியாளர் செய்யாறு பாலு ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயன்
சமீபத்தில் நாஞ்சில் விஜயன் மீது ஒரு திருநங்கை புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் புகார் கொடுத்துள்ளதன் படி ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயனும் அந்த திருநங்கையும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் ஆன பிறகு என்னை விட்டு விலகிவிட்டார்.
அவர் மனைவி குழந்தைகளுடன் என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய புகார் என அந்த திருநங்கை புகார் கொடுத்துள்ளார். செய்தியாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து ஆதங்கப்பட்டுப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செய்யாறு பாலு
செய்தாள்களில் பல சாதாரண மக்களின் கள்ள காதல் பற்றிய செய்திகள் வந்தாலும் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளே மிகவும் பேசுபொருளாக மாறுகிறது என்கிறார்.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்ட இவர்கள் செய்யும் தவறுகள் இன்றைய இளம் தலைமறையினரை பாதிக்கும்.
தற்போது நாஞ்சில் விஜயன் மீதான புகார் அவரது சினிமா வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
“அப்பா அந்த விஜய் டிவிக்கு ஒரு கும்பிடு அதை எவ்வளவிற்கு எவ்ளவு மனிதனை பிரபலப்படத்தி உச்சத்திற் கொண்டு செல்லுமோ அதே அளவிற்கு பிரச்சனைகளையும் உருவாக்கும்”.
அந்த திருநங்கை, நாஞ்சில் விஜயனுடன் ஏழு வருடங்கள் சுகபோகமாக வாழ்ந்ததாகவும், திருமணம் ஆன பிறகு கைவிட்டதால் நீதி வேண்டும் என்றும் கூறுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த பிறகே தனக்கு தைரியம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் எல்லோருமட ஒரு விடயத்தை புரிந்துகொள்வது அவசியம்.
பெண்களை தவறாக நடத்தினால் வீழ்ச்சி நிச்சயம். மனைவி குழந்தைகள் என்று இருந்த நாஞ்சில் விஜயன் குடம்பத்தில் ஏன் இப்படி ஒரு தறறு நடந்துள்ளது.
எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் ஒழுக்கத்தை கடைபிடித்தாலே போதும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்றும் அவர் அறிவுரை கூறுகிறார்.
இறுதியாக, இது போன்ற தவறுகள் தனிமனிதனை மட்டுமல்ல, குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் என்பதை செய்யாறு பாலு சுட்டிக்காட்டுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |