ஓய்.. பொண்டாட்டி: திருநங்கை புகாருக்கு Reply கொடுத்த நாஞ்சில் விஜயன்
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையகரத்தில் திருநங்கை ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில், கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், சில மாதங்களாக தன்னிடம் இருந்து விலகி விட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
11 ஆண்டுகளாக அவரை தெரியும், ஐந்து ஆண்டுகளாக அவருடன் நெருங்கி பழகினேன்.
திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தைகளால் என்னை ஏமாற்றிவிட்டார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு Reply அளிக்கும் விதமாக மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நாஞ்சில் விஜயன்.
அதில், தன்னுடைய மனைவிக்கு யார் சொல்வதையும் நம்பாதே.. பாப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள் என கூறுகிறார்.
கடைசியாக பொலிஸ் வேடத்தில் வந்த நபரை பார்த்ததும், நான் எந்த தப்பும் பண்ணல சார் என கூறுவது போல் முடிகிறது.
