Mr.விஜய் டிவி அட்மின்! வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? நாஞ்சில் விஜயனின் வைரல் பதிவு
விஜய் டிவி அட்மின் எனக்கு ஏன் எனக்கு மாத்திரம் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறவில்லை, மற்றவர்களுக்கு கூறிவிட்டு என்னை மட்டும் ஒதுக்கியது ஏன் என கேள்வியெழுப்பி நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
நாஞ்சில் விஜயன்
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர்.
நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

அண்மையில் திருநங்கையை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதால் நாஞ்சில் விஜயன் பற்றிய விடயங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.
கடந்த 11 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

திருநங்கை விஜே வைஷுவும் பிறந்த நாள் வாழ்த்து கூறிவெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன், விஜய் டிவி அட்மின் எனக்கு ஏன் எனக்கு மாத்திரம் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறவில்லை என கேள்வியெழுப்பி தற்போது வெளியிட்டுள்ள பரபரப்பு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த வாரம் விக்ராந்த், ஸ்ரீகவுரி பிரியா, புகழ், கமல்ஹாசன், வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை விஜய் டிவி கூறிய நிலையில் தனக்கு மட்டும் ஏன் கூறவில்லை என நாஞ்சில் விஜயன் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |