விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம்: வெளியான திருமண புகைப்படம்
பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், மரியா என்ற பெண்ணுக்கு இனிதே திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ரியாலிட்டி ஷோக்களில் நகைச்சுவை கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய நாஞ்சில் விஜயன், பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிக்க துவங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற தற்போது படங்களிலும் நாஞ்சில் விஜயன் நடிக்க துவங்கி இருக்கிறார்.
வீட்டில் தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்து தனது கடமைகளை நிறைவாக முடித்துள்ள நாஞ்சில் விஜயன் தற்போது திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணுடன் நாஞ்சில் விஜயனுக்கு இருகுடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுடைய திருமணம் சென்னையில் இன்று விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனுக்கு வெள்ளித்திரைக்கு மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |