16 நாளில் ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு ஆகிட்டு: நாஞ்சில் விஜயனின் கல்யாண காதல் கதை
நகைச்சுவை மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயனின் காதல் திருமணம் குறித்து நேர்காணலில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர் தன் காமடி பேச்சும், நகைச்சுவையும் அனைவருக்கும் விரும்பும் வகையில் சிரிக்க வைத்திருக்கிறது. மேலும், இவர் பல நிகழ்ச்சிகளில் அதிகம் பெண் வேடம் போட்டு நேர்த்தியாக நடித்து பலரையும் ஈர்த்திருந்தார்.
நாஞ்சில் விஜயன் கொவிட் காலத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்த வேளையில், வனிதா மற்றும் சூர்யா தேவியிடம் சர்ச்சையில் சிக்கி பெரிய பெரிய தகராறும் ஏற்பட்டிருந்தது. இப்போது இவர் சில சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திருமணம்
இந்நிலையில், அண்மையில் நாஞ்சில் விஜயன் திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் இவருக்கும் மரியா என்பவருக்கும் நிச்சயம் நடந்தது.
அதன்பின் செப்டெம்பர் 3ஆம் திகதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாஞ்சில் விஜயன் - மரியா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |