நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் டும்..டும்..டும்.. : பெண் யார்ன்னு தெரியுமா?
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயனின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன்
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன்.
இவர் காமெடி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண் போல் சேலை கட்டி, கம்மல் போட்டு, பூ வைத்து, நடனமாடி அசத்துவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்தப் புகழ் கொண்டு இவருக்கு வெள்ளித்திரையிலும், சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியான நாஞ்சில் விஜயன் யூடுயூப் நடத்தி வருகிறார். அதில் வெளியிடும் வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
விரைவில் திருமணம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நாஞ்சில் விஜயன் குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில், நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் அவரது உறவினர் என்று சொல்லப்படுகிறது. வைரலாகும் நாஞ்சில் விஜயனின் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |