பெரும் கடன் சுமையில் ரோபோ சங்கர் குடும்பம்.. கட்ட முடியாமல் தவிக்கும் மகள்
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தினர் பெரும் கடன் சுமையால் தவித்து வருவதாக நாஞ்சில் விஜயன் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தன் காரணமாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் ஐசியூவிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும், அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை நடந்த பார்ட்டி
இந்த நிலையில், ரோபோ சங்கர் இறப்பு பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றது.
இது குறித்து நாஞ்சில் விஜயன் பேசுகையில், “ நடிகர் ரோபோ சங்கர் உயிருடன் இருக்கையில் அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக சரியான வேலை இல்லை. அவர் தற்போது இருந்த வீட்டிற்கு மாதம் இஎம்ஐ மாத்திரம் 1 லட்சம் வரை கட்ட வேண்டும். அவர் நம்பியிருந்த பிரபல தொலைக்காட்சியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் ஓடி ஓடி உழைத்தார். அவர் இல்லையென்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. கடன் சுமையால் இந்திரஜா சிறு சிறு விளம்பரங்களை கூட செய்து வருகிறார்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |