அசத்தலான சுவையில் காரசாரமான நண்டு வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாக அனைவருக்குமே சுவையாக சாப்பிடுவது மிகவும் பிடித்தமாக விடயமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை விதவிதமாக சாப்பிடுவது வரம் என்றே சொல்ல வேண்டும்.
அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.
அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதிலும் நண்டு வறுவல் என்றால் பலருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் காரசாரமான நண்டு வறுவல் எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே. கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1தே.கரண்டி
கரம் மசாலா - 1/4 தே.கரண்டி
நண்டு - 3/4 கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போகம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு, நண்டு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர் மூடியைத் திறந்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், மணமணக்கும் சுவையில் நண்டு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |