நான்கு, ஐந்து குழந்தைகளை பெத்த வலி இருக்கும்... நமிதாவுக்கு நடந்தது என்ன? பல உண்மைகளை உடைத்த திருநங்கை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்காக பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் வைசு நிசா மலர் என்ற திருநங்கை இது குறித்த பல்வேறு விடயங்களை கூறியுள்ளார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் பங்கேற்றார்.
திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாகவும் பிச்சை எடுக்கவும் காரணம் அவர்களின் பெற்றோர்தான் என்றும் கூறிய நமீதா, நீங்க மாறுங்க முதல்ல என்று கூறி கண்ணீர்விட்டார்.
நமீதாவின் இந்த பேச்சைக் கேட்டு பலரும் கண்ணீர் விட்டனர். ஒரே நாளில் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன் தினம் நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் திருநங்கை நேர்காணலில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.