சண்டேவை ஸ்பெஷலாக முடிக்க நல்லி எழும்பு குழம்பு ரெசிபி
சண்டே வந்து விட்டால் வீட்டில் எல்லோரும் ஒன்று கூடி என்ன சமையல் செய்யலாம் என்று முதல்நாளோ யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி இந்த சண்டே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் வீட்டிலே நல்லி எழும்பு குழம்பு ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
- 2 கிலோ மட்டன் நல்லி எலும்பு
- சோம்பு
- மிளகு
- சீரகம்
- இஞ்சி
- கொத்தமல்லி
- 10 வரமிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- பட்டை
- லவங்கம்
- 7 பச்சை மிளகாய்
- ஒரு தக்காளி
- பூண்டு
- பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- கருவேப்பிலை
செய்முறை
கறிக்கு தேவையான தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தொடர்ந்து குறுக்கரில் மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மட்டன் மூடும் வகையில் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை வேக விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக எண்ணெயை பிரித்தெடுக்கும் வகையில் வதங்க விட வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும்.
தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே அதில் தேங்காய் பால் சேர்க்கவும். இதனை தொடர்ந்து தாளிப்புக்காக கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்து இறக்கவும்.
இப்போது சூப்பரான மட்டன் நல்லி எலும்பு குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |