மகனால் பல கோடிகளை இழக்கும் சோகம்: ஷாருக்கானுக்கு அடுத்தடுத்து வரும் சோதனை
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், ஷாருக்கான் பல கோடிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். மகனை வெளியே எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாத நிலையில், நீதிமன்றம் ஆர்யனின் காவலை நீடித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஷாருக்கான் பிரபல நிறுவனமான பைஜுஸின் விளம்பரப்படங்களில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு பதில் நடிகர் Nakuul Mehta என்பவர் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூருவை சார்ந்த ஆன்லைன் கற்றல் நிறுவனமான பைஜுஸ் நிறுவனத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் விளம்பர தூதுவராக நடித்து வந்தார். இதற்கான சம்பளமாக சம்பளமாக 4 கோடி ரூபாய் வாங்கிய நிலையில், மிகவும் குறுகிய காலத்திலேயே இந்நிறுவனம் அதீத வளர்ச்சி அடைந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள சார்ச்சையால், ஷாரூக் கான் நடித்த விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக விளம்பரங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பைஜுஸில் இவர் நடித்த விளம்பர படங்கள் நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகப் பிரபலமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.