பட்டப்பகலில் பின்னிப்பிணைந்து சண்டையிட்ட சாரைப்பாம்புகள்: பயத்தை உண்டாக்கும் காட்சி!
பகல் நேரத்தில் இரண்டு சாரைபாம்புகள் எந்தவித பயமும் இல்லாமல் பின்னி பிணைந்து சண்டை போட்டு கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
வீதியோரங்களில் காணப்படும் செடிகளுக்கருகில் இரண்டு பாம்புகள் சண்டையிட்டு கொண்டு இருந்தன. இதை பொதுமக்கள் பாம்புபிடி வீரரிடம் அறிவித்தனர். இதன் பின்னர் இந்த பாம்புகளை பாம்புபிடி வீரர் பிடித்து அதன் வாழ்விடத்தில் விடுவித்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த பாம்பு பிடி வீரர் சாரைப்பாம்புகள் விஷமற்றவை. சாரை பாம்புகள் எலிகளை வேட்டையாடுவதால், சாரைப்பாம்புகள் உள்ள இடத்தில் எலி தொல்லையோ, எலியால் ஏற்படும் சுகாதார சீர்கேடோ இருக்காது.
நிலத்தில் விளை பயிர்களை சேதப்படுத்திகின்ற எலிகளை சாரை பாம்புகள் உண்பதனால், உழவர்களின் நண்பன் சாரைப்பாம்பு என்றும் அழைக்கப்படுகின்றன. நம் நிலத்திற்கு சாரைப்பாம்புகள் மிகவும் முக்கியமானவை.
சாரை பாம்புகளை பார்த்தால், அதனை அடிக்கவோ விரட்டவோ முற்படக்கூடாது. வனத்துறைக்கும் வன உயிர் ஆர்வலர்கள் பாம்பு பிடி வீரர்களுக்கும் தகவல் தர வேண்டும். என கூறினார். அனைத்து பாம்புகளும் கொல்லப்படாமல் அவற்றின் வாழ்விடத்தில் வாழ்வது மிகவும் நன்மையான விஷயமாகும்.
பொது இடத்தில் பின்னி பிணைந்து சண்டையிட்ட சாரை பாம்புகள்#Snake | #Viral pic.twitter.com/lsiYsm4jCD
— Indian Express Tamil (@IeTamil) July 26, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |