செலவே இல்லை... நகங்கள் உடையாமல் பராமரிக்க சூப்பர் வழிமுறைகள்
உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நகங்கள் விளங்குகின்றன.
அவற்றை சீராக பராமரிப்பதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
இதற்காக ரசாயனங்கள் கலந்த கிரீம்களுக்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் கிரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி ஷியா வெண்ணெய்
- 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
- 2 தேக்கரண்டி வைட்டமின் ஈ எண்ணெய்
- 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
- 3 தேக்கரண்டி மரவள்ளிக்கிழங்குத்தூள் ( ஆரோரூட் பொடி) விருப்பமான
- நறுமண எண்ணெய் 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஷியா வெண்ணெய் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெய்களை ஒவ்வொன்றாக ஊற்றி கலக்கவும்.
சிறிது நேரத்தில் அந்த கலவை கிரீம் பதத்திற்கு வரும்.
கடைசியாக அதில் கற்றாழை ஜெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு தூளை சேர்த்து கலக்கவும்.
இந்த கிரீமை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து உபயோகிக்கலாம்.
இதை கைகளுக்கும், நகங்களுக்கும் பூசலாம். இந்த கிரீம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதை குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அறையின் வெப்ப நிலையிலேயே வைத்து பயன்படுத்தலாம்.