பேனா ரீஃபிலில் நெயில் ஆர்ட்டா? ஈஸியான டிப்ஸ் - தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் தங்களின் நகங்களை சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
ஏனெனின் வெளியிடங்களுக்கு செல்லும் போது நாம் அதிகமாக கைகளை காட்டி பேச வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
அப்போது மற்றவர்களின் பார்வைக்கு கைகளை அழகாக காட்டிக் கொள்வதற்காக நகங்களை அழகுப்படுத்துவார்கள்.
பணம் இருப்பவர்கள் பியூட்டி பார்லர்களில் செய்துகொள்வார்கள். அப்படியும் வேண்டாம் எளிமையாக வீட்டில் செய்யலாம் என நினைப்பவர்கள் வீட்டிலுள்ள சிறு சிறுப் பொருட்களை பயன்படுத்தி வடிவமைத்து கொள்ளலாம்.
வீட்டிலுள்ள சிறுப் பொருட்களை எப்படி நெயில் ஆர்ட் செய்வதற்கு பயன்படுத்தலாம் என்பதனை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
நெயில் ஆர்ட் டிப்ஸ்
1. இயர்பட்ஸ்
காதுகளை சுத்தம் செய்வது மட்டுமல்ல வடிவமைப்பு வேலைகளையும் இயர்பட்ஸில் செய்யலாம்.
முதலில் விரல்களில் இருக்கும் நகங்களுக்கு நெயில் பெயின்ட் பூசவும். பின்னர் இயர்பட்ஸை பயன்படுத்தி பூக்கள் போன்று வடிவமைத்தல் அல்லது புள்ளிகள் போடுதல் இப்படியான வடிவங்களை போடலாம். நெயில் பெயின்ட் தெரிவு சிறப்பாக இருந்தால் கை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
2. டூத்பிக்
முதலில் கைகளை சுத்தம் செய்து விட்டு நெயில் பெயின்டை பூசவும். பின்னர் பாதி நகங்களுக்கு மாத்திரம் வேறு நிற நெயில் பெயின்டை பூசவும்.
டூத்பிக்கை எடுத்து அதன் பின் புறமாக வேறு நிறங்களில் இருக்கும் நெயில் பெயின்டை தொட்டு புள்ளிகள் வைக்கலாம். அல்லது கீழ் ஒரு வளைவை உருவாக்கலாம். இந்த வடிவம் செய்தால் அழகாக இருக்கும்.
3. பேனா ரீஃபில்
நகங்களை சுத்தம் செய்த பின்னர் கருப்பு அல்லது வேறு ஏதேனும் நிற நெயில் பெயிண்ட் பூசவும். இதற்குப் பிறகு, சிவப்பு, வெள்ளை அல்லது ஏதேனும் கலவையான நெயில் பெயிண்டை எடுத்து பேனாவின் ரீஃபிலை நனைத்து ஏதாவது வரையலாம்.
அலை போன்ற டிசைன்களை போடலாம். பியூட்டி பிளெண்டரை பயன்படுத்தி வண்ணங்களின் கோர்வையை உருவாக்கலாம். இதற்காக வேறு வேறு வண்ணங்கள் கொண்ட நெயில் பெயின்டை கூட பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |