அக்காவின் காதல் திருமணம்... பல வருடத்திற்கு பின்பு நகுல் கூறியது என்ன?
நடிகை தேவயாணியின் காதல் திருமணம் குறித்து நீண்ட வருடத்திற்கு பின்பு அவரது தம்பியும், நடிகருமான நகுல் மனந்திறந்து பேசியுள்ளார்.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் தான் தேவயாணி. இவரது கொஞ்சம் தோரணையில் உள்ள பேச்சு ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது என்று சொல்லலாம்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் கொடிகட்டி பறந்த தேவயானி, இயக்குனர் ராஜ்குமாரைக் காதலித்து பெற்றோரை எதிர்த்து கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
காதல் திருமணத்திற்கு பின்பு பெற்றோர் வீட்டில் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இவரது தம்பி இவரிடம் பாசமாக இருந்து வருகின்றார். தற்போது தேவயாணியின் காதல் திருமணம் குறித்து பல ஆண்டுகளுக்கு நகுல் மனம் திறந்துள்ளார்.
நகுல் பேசியது என்ன?
நகுல் பேசுகையில், தனது அக்காவின் முடிவு தம்பியாக தனக்கு கோபத்தையும், வருத்தத்தினையும் ஏற்படுத்தியது. அக்காலத்தில் இந்த மாதிரியான விடயங்களை புரிந்து கொள்ளும் முதிர்ச்சி இல்லை.
ஆரம்பத்தில் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த சூழ்நிலைக்கு எவ்வாறு எதிர்கொண்டு, எதிர்வினையாற்றுவது என்று கூட தெரியவில்லை. காலம் கடந்த பின்பு தான் அதனை புரிந்து கொள்ளும் தன்மை வந்தது. அக்கா திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது தா்ன் மிகவும் முக்கியம்.

அக்காவின் கணவரும் நல்ல மனிதர், தன்னிடம் மரியாதையாகவும், அன்பாகவும் பேசுவார். அவர் மீதும் அதிகமான மரியாதை உள்ளது. அக்கா மகிழ்ச்சியாக வாழ்ந்தால் தானும் மகிழ்ச்சியாக இருப்பதாக நகுல் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |