நாகார்ஜூனாவின் செயலால் மீண்டும் வெடித்த சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சர்ச்சை! ரசிகர்கள் ஷாக்
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய போகிறார்களா என்ற கேள்விக்கு நாகார்ஜூனா பதிலளிக்காமல் நழுவி சென்றுள்ளார்.
2010ஆம் ஆண்டு வெளியாள யே மாயா சேசவே என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைத்ராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகரும் நடிகை சமந்தாவின் மாமானாருமான நாகார்ஜூனாவின் செயல்பாடு குடும்பத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் ஊடகங்களை சந்திப்பதில் இருந்தும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருந்தும் விலகியுள்ளார் நடிகர் நாகார்ஜூனா.
அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்தற்கு கொரோனா அச்சுறுத்தல் ஒரு காரணம் என்றாலும் ரசிகர்கள் அதனை ஏற்கவில்லை. சமந்தா மற்றும் நாக சைதன்யா குறித்து பரவி வரும் விவாகரத்து தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே நாகார்ஜூனா மீடியாவை தவிர்ப்பதாக கூறி வருகின்றனர்.
நாக சைதன்யா - சமந்தா இடையே எந்த பிரச்சனையும் இல்லாவிட்டால் அவர் அதெல்லாம் வதந்தி என்று கூறி விட்டு செல்லலாமே என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஊடகங்களைத் தவிர்க்கும் அவரது நடவடிக்கை, இருவரும் பிரிந்து தங்களின் தனி வழியில் செல்லத் திட்டமிடுவதற்கான முக்கிய ஹிண்டாக கருதப்படலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.