சமந்தா விரும்பினார்... விவகாரத்து சர்ச்சைக்கு கொதித்த நாகார்ஜுனா! அதிரடி பதிலால் முற்று வைத்த மாமனார்
சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார் என்று இணையத்தில் வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா, முதல்முறையாக மனம் திறந்து ஒரு பேட்டி அளித்துள்ளதாக பரபரப்பான செய்தி வெளியானது.
அதில், நாகசைதன்யா, சமந்தா விவகாரத்தில் எல்லாம் தந்தைகளைப் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். ஆனால், விவாகரத்து முடிவு முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டது என்றும், அவர்தான் விவாகரத்தை விரும்பினார் என்றும் நாகார்ஜுனா கூறினார்.
அந்த முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்பாவாகிய தன்னைப் பற்றியும், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயர் என்னவாகும் என்பது குறித்தும் அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும், நான் கவலைப்படுவேன் என நினைத்து நாக சைதன்யா கவலை அடைந்ததாக நாகார்ஜூனா கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, நாகார்ஜூனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சமந்தா, நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து எந்த ஒரு பேட்டியும் நான் கொடுக்கவில்லை.
நான் கூறியதாக ஊடகங்களிலும், சமூகவலைத்தளத்திலும் பரவும் செய்து முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சமச்தாவின் மாமனார் நாகார்ஜூனா கூறியுள்ளார்.