நாக சைதன்யா - சோபிதா விவாகரத்துக்கு தேதி குறித்த ஜோதிடர்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா திருமணம் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில் விவாகரத்து தேதி குறித்த ஜோதிடருக்கு நேர்ந்த கதி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக மீண்டும் நாக சைதன்யா அறிவித்திருந்தார்.
விவாகரத்து கணிப்பு
இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் திருமணம் வெகு விமர்சையாக நடக்கவுள்ளது.
இந்த நிலையில், நாக சைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதிகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொள்வார் என்றும் வேறொரு பெண்ணால் நாக சைதன்யா பெரும் சவால்கள் எதிர்கொள்வார் என்றும் ஜோதிடர் ஒருவர் கணித்திருந்தார்.

திருமணம் நடக்காத போது விவாகரத்து பற்றி பேசியதால் ரசிகர்கள் கோபமடைந்து ஜோதிடர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
தெலுங்கானா நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “விவாகரத்து கணிப்பு வழக்கின் மேலதிக விசாரணையை மகளிர் ஆணையகம் நடத்த வேண்டும்..” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை அறிக்கை அடிப்படையாக வைத்து ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை பெறும் சவாலாக எடுத்துக் கொண்ட ஜோதிடர் “ சட்ட ரீதியாக நாக சைதன்யா- சோபிதா விவாகரத்து கணிப்பு வழக்கை சந்திப்பேன்.” என உறுதியாக பேசியுள்ளார்.
இந்த சம்பவம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        