2வது மனைவி சோபிதாவுக்கு நாக சைதன்யா போட்ட கண்டிஷன்... அவரே சொன்ன தகவல்!
நடிகை சோபிதா துலிபாலா தனது கணவர் நாக சைத்தன்யா அவருக்கு விதித்துள்ள அன்பு கட்டளைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சோபிதா துலிபாலா- நாக சைதன்யா
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுப்பாடுகள் காரணமாக 4 ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதற்கிடையில் நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மாறியது.
அதன் பின்னர் இவர் தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அது குறித்து இருவருமே மௌனம் காத்துவந்தனர்.
ஆனால் வதந்திகளை உண்மையாக்கும் வகையில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது ஒரு சில நேர்காணல்களில் சோபிதா கலந்துக்கொண்டுள்ளார். அதில் தனது திருமணம் தொடர்பாகவும் நாக சைதன்யா குறித்தும் சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
குறித்த நேர்காணலின் போது தனது கணவர் தனக்கு இட்டுள்ள அன்பு கட்டளைகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.
என்ன கண்டிஷன்?
அவ்வாறு சோபிதா துலிபாலா குறிப்பிடுகையில், நாக சைதன்யாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது என்றும் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் தாய் மொழி தெலுங்கு தான்.
ஆனால் நாக சைத்தன்யா தன்னிடம் தெழுங்கில் பேச யாரும் இல்லை என அடிக்கடி கவலைப்பட்டுள்ளார்.
காரணம், அவரது சகோதரர் அகில் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இவர் ஆங்கிலத்தில் பேசுவார்.
அதனால் வீட்டில் இருக்கும் போது தன்னுடன் தெலுங்கில் பேச வேண்டும் என சோபிதாவிற்கு சைத்தன்யா அன்பாக கட்டளையிட்டாராம்.
அதனை ஏற்று சோபிதாவும் வீட்டில் இருக்கும் சமயங்களில் தெலுங்கில் தான் பேசுகின்றேன் என தனது கணவர் பற்றி பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |