இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! சமந்தாவின் மோசமான நிலையிலும் இப்படியா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தன்னுடை முன்னாள் கணவரான நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
காதல் திருமணம்
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வலம் வரும் நடிகை தான் சமந்தா, சமீபகாலமாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தொடர்ந்து சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.
இவர்களின் விவகாரத்திற்கு சரியானதொரு காரணத்தை இரு தரப்பினரும் முன்வைக்காத நிலையில், சமந்தா திரையுலகில் மிகவும் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தார்.
நோய் தொற்றின் தாக்கம்
இந்நிலையில் சமந்தாவிற்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலை சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இது ஒரு புறம் இருக்கையில், நாக சைதன்யா சமந்தாவை நேரில் சென்று நலம் விசாரித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் மீண்டும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்தனர்.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் நாக சைதன்யா சுமார் 19 வயது மதிக்கதக்க பெண்ணொருவருடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான சமந்தா, நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.