மனைவி சமந்தாவை கேலி செய்த நடிகையுடன் ஜோடி சேரும் நாக சைத்னயா!
மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா, பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த ரோலில் ராணா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் தன் முன்னாள் மனைவி சமந்தாவை கேலி செய்த நாயகி பூஜா ஹேக்டேவுடனே தற்போது நாக சைதன்யா நடிக்க இருப்பது தான்.
பூஜா ஹெக்டே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார்.
அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் சமந்தா மற்றும் பூஜா ஹெட்ஜ்ஜேவின் ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்தது.
இப்படியான நிலையில் பிரிந்த பிறகு பூஜா ஹேக்டேவுடன் நாக சைதன்யா நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
