மீண்டும் இணைகிறார்களா சமந்தா - நாக சைதன்யா ஜோடி: புதிய பதிவால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்
விவாகரத்துப் பெற்று பிரிந்து போன நாகசைதன்யா மற்றும் சமந்தா மீண்டும் இணைந்து விட்டார்களா என்றக் கேள்வியுடன் ஒரு பதிவு வைரலாகி வருகின்றது.
சமந்தா -நாகசைதன்யா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படமொன்றில் இணைந்து நடித்து போது இருவரும் நெருங்கிய நண்பர்களாகி காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களின் காதலை இருவீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள்.
நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
மீண்டும் இணைந்தார்களா?
சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரிந்து 2 வருடங்கள் ஆகின்ற நிலையில் தற்போது நாகசைதன்யாவின் இன்ஸ்டா பதிவை வைத்து இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அதாவது சமந்தாவின் நாய்க்குட்டியுடன் ஜாலியாக காரில் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தாவிடம் இருந்த அந்த நாய்க்குட்டி தற்போது நாக சைதன்யாவிடம் உள்ளதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களா என்று மகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |