கமலின் பிக்பாஸ் சீசன் 5ல் நதியா ? எதிர்பாராததை எதிர்பாருங்கள்...இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் நதியா சங் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது.
இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய போட்டியாளர்கள் யாரும் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலேசியாவின் பிரபல டிக் டாக் கலைஞர் நதியா சங் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இதுவரை கன்ஃபார்ம் போட்டியாளர்கள் என்கிற ஒரு பெரிய லிஸ்ட்டே வந்துள்ளது. நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நமீதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, ஜிபி முத்து மேலும், சில பெயர்களும் அடிபட்டுள்ளன.
ஆனால், எப்படி இருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கும் போது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதி.