நாட்டாமை பட டீச்சர் மகளா இது? ஹீரோயினாக அறிமுகமாகும் புதிய படம்!
தமிழ் திரையுலகில் முன்பு நடித்து ஹிட் கொடுத்த சில நடிகைகள் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்தவகையில், சரத்குமார், இரு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகை ராணியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைராலாகி வருகின்றது.

நடிகை ராணி
நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த வல்லுப்பாட்டு படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை ராணி. இப்படத்திற்கு பின்பு சரியாக வாய்ப்பு வராததால், கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

ஜெமினி படத்தில் விக்ரமுடன் இணைந்து ஓபோடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மேலும் பிரபலமானார்.
நடிகை ராணியின் மகள்
இந்நிலையில் இவரின் மகள் தார்னிகா தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமாகியுள்ளாராம்.
பார்ப்பதற்கு அச்சு அசல் தனது அம்மாவை போலவே தார்ணிகா, தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கிறார்.

இவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், இணையத்தில் தார்னிகா பற்றி அதிகம் தேடப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |