இனி இந்த தவறை மீண்டும் செய்யாதீங்க! தனுஷின் புகைப்படத்திற்கு கொதிக்கும் நெட்டிசன்கள்
தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதனை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.
தனுஷின் நானே வருவேன்
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனுஷ் ஸ்டைலாக இருக்கும் ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த போஸ்டர் பிரச்சினை யை கிளப்பியுள்ளது. அதில் தனுஷ் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட நானே வருவேன் போஸ்டர்களிலும் தனுஷ் புகைப்பிடித்தபடி தான் போஸ் கொடுத்திருந்தார்.
Naane varuven ! pic.twitter.com/qL54CjPpLj
— Dhanush (@dhanushkraja) March 25, 2022
கண்ணை மூடக் கோரி பாலா செய்த காரியம்! கண்ணீர் சிந்திய தாமரை
நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கலாமா?
புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று படம் துவங்குவதற்கு முன்பு கூறினால் மட்டும் போதாது... நீங்களே அதனை ஊக்குவிக்கலாமா? என்று தனுஷை சமூக வலைதளவாசிகள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டைலாக போஸ் கொடுக்க வாயில் தம் தேவையில்லை என்றும் தொடர்ந்து இவ்வாறு தவறு செய்துவருவதை நல்லதில்லை என்றும் இனி இவ்வாறு வெளியிடாதீர்கள்... ரசிகர்களும் உங்களைப் பார்த்து புகைப்பிடிப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி போஸ்டரை பார்க்கும் சிறுவர்களுக்கும் அந்த ஆசை ஏற்படலாம் என்றும் இனி இவ்வாறு செய்யாதீர்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
