நாம் இருவர் நமக்கு இருவரில் அடுத்த ட்விஸ்ட்! 25 வருடங்களுக்கு பிறகு இணையும் தாய்... கண்ணீர் விடும் மகன்!
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ‘மாறன்’ என்ற புதிய கதாப்பாத்திரம் என்டிரி கொடுத்திருக்கும் நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கதை நகர்கிறது.
விஜய் டீவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஏனென்றால், இந்த சீரியலில் வரும் முத்துராசு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொன்றது யார் என்ற ட்விஸ்ட் எழுந்தது.
தொடர்ந்து 2 வாரங்கள் இதுகுறித்த ப்ரோமோக்களை வெளியிட்ட விஜய் டிவி யார் தான் கொலை செய்தது? என்ற கேள்வியை ரசிகர்களே கேட்கும் அளவிற்கு எதிர்பார்ப்புகளை தூண்டினர்.
தற்போது அந்த சீரியலின் ஹீரோவான மாயனின் தங்கை காயத்திரி தான் தனது சகோதரியின் வாழ்க்கையை காப்பாற்ற அவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
முத்துராசை கொன்றது காயத்திரி தான் என்று உண்மை தெரிய வந்ததால் அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற முழு சொத்தையும் மாசாணி என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட முத்துராசின் அம்மாவிற்கும் எழுதி கொடுத்து விட்டார் மாயன்.
இதனால் மாயன், அவரது சித்தி மற்றும் காயத்ரி உட்பட அவரது மூன்று மகள்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இனி கதை எப்படிப் போகும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், யாரும் எதிர் பார்க்காதவகையில் மாயனின் சகோதரன், மாறன் புதிதாக மாஸ் என்ட்ரீ கொடுத்துள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் முதல் அத்தியாயத்தில் இரண்டு கேரக்டரில் நடித்த செந்தில், இந்த பாகத்தில் ‘மாயன்’ என்ற ஒரே கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் நிலையில் தற்போது மாறன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிப்பது தெரியவந்துள்ளது.
தற்போது மாறன் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரது அம்மாவுடன் வருகை தந்துள்ளதை பார்த்து மாயன் எமோஷன் காட்சிகள் ஒளிபரப்பானது.
அதில் மாறன் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் குறித்தும், உணவு, தங்க இடம் இன்றி தவித்தது குறித்தும் விளக்குகிறார்.
மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல இடத்தில் இருக்கும் போது தான் இங்கு திரும்பி வர வேண்டும் என நினைத்து இதனை நாட்களாக காத்திருந்து ராத்திரி பகலாக உழைத்தது நல்ல நிலையில் இருப்பதால் இந்த மண்ணிற்கு திரும்ப வந்ததாக மாறன் கூறவதை கேட்டு மாயன் நெகிழ்கிறார்.
இதனை தொடர்ந்து தனது அம்மாவுடன் கண்கலங்கியவாறே பேசுவதற்காக செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
மேலும் மாயனின் தந்தை அவரது முதல் மனைவியை விட்டு 25 வருடங்களுக்கு முன்னர் பிரிந்ததால் அவர் தனது இரண்டு மகன்களில் ஒருவரான மாறனை அழைத்து கொண்டு ஊரைவிட்டு சென்றதும் தற்போது தெரியவந்துள்ளது.
மாயன், மாறன் மற்றும் அவரது அம்மாவுடன் 25 வருடங்களுக்கு பிறகு சேர்த்துள்ளதால் இனி மாசாணி, முத்துராசு அம்மாவை எதிர்ப்பது குறித்த காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.