அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம்

Tamil nadu
By Fathima Aug 29, 2022 11:00 PM GMT
Report
Courtesy: BBC Tamil

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.

கடந்த 3 மாதங்களாக அந்த குழுவினர் அதிசய கிணறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், கேமராக்கள் கொண்டு ஆய்வு செய்தனர்.

அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம் | Mystery Well In Tamilnadu

அதில், பல கிணறுகளில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளதாகவும் மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்கி நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதாக தெரியவந்துள்ளது.

சில கிணறுகளில் கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அதிசய கிணறை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் இன்று பார்வையிட்டனர். தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். அதனுள் நவீன ட்ரோன் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் அந்த கிணறுகள், சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது.

அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம் | Mystery Well In Tamilnadu

மேலும், மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும் போது 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் சென்றும் நிரம்பாத கிணறு குறித்து ஐஐடி ஆய்வு செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து ஐஐடி பேராசிரியர்கள் இந்த ஆய்வுக்காக நியமிக்கப்பட்டனர்.

பொதுவாக, 'ரேபிட் ரீசார்ஜ்' எனப்படும் அதிவேக நீர் பரவல் முறையில் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும்போது ஒரு மணி நேரத்திலேயே அந்த கிணறு நிரம்பியிருக்க வேண்டும்.

ஆனால் அந்த கிணறு நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் கிணற்றின் அடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறைகளான குகைகள்தான் என கண்டறிந்துள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.   

அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம் | Mystery Well In Tamilnadu

நிலத்தடி நீரும், மழை நீரும் சேர்ந்து இந்த சுண்ணாம்பு பாறைகளை கரைத்து துளைகளை பெரிதாக்கியதாகவும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மாற்றம் காரணமாக கிணற்றுக்குள் சுண்ணாம்பு பாறைகள் பாதாள குகைகளாக உருவாகியுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  

இந்த கிணற்றுக்குள் பூமிக்கு அடியில் நிலத்தடி நீர் ஓடைகள் போல உருவாகியுள்ளது. ஒரு வலைபின்னல் போல சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த நிலத்தடி நீர் பாதைகள் உருவாக்கியுள்ளன. நிலப்பரப்பில் ஓடும் நீர் ஓடைகள் போல பூமிக்கு அடியில் இந்த பாதாள ஓடைகள் உள்ளன. அதில் நீர் அதிவேகமாக பரவலாக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் பூமிக்கு அடியில் செல்லும் இந்த நீர் பாதையில் துளையிட்டு, வெள்ள உபரி நீரை செலுத்தினால், பூமிக்கு அடியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிணறுகளுக்கும் நீர் அதிவேகமாக சென்று அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரம்.   

கடந்த மூன்று மாதங்களாக இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு செய்த ஐஐடி பேராசிரியர்கள், "சுமார் 300 கிணறுகள் வரை ஆய்வு செய்துள்ளோம்," என்று கூறுகின்றனர்.  

160 கிணறுகளில் அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் மாதிரிகளை சேகரித்தும் ஆய்வு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  

அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம் | Mystery Well In Tamilnadu

இந்த ஆய்வுப்பணிக்காக நீர் மூழ்கி கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பூமிக்கடியில் சுண்ணாம்புப் பாறைகளில் உள்ள துளைகளின் அளவு தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.  

"அந்த வகையில் இந்த ஆயன்குளம் கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான்," என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

"இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் ஆறு கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்கிறது," என்றும் ஆய்வுக்குழுவினர் கூறினர்.  

இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள கிராமங்களிலும் உள்ளன. கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகள் உள்ளன. அவற்றையும் ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.  

அதிசய கிணறு: தோண்டத் தோண்ட விலகும் மர்மம் | Mystery Well In Tamilnadu

இது குறித்து விவரித்த ஆய்வாளர்கள், "இது சிறிய அளவிலான ஆய்வு திட்டம் தான். கருமேனியாறு நீர் பாதை அருகேவரை இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். ராதாபுரம், திசையன்விளை சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். உங்கள் கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகளோ குகைகளோ இருப்பது அறிந்தால் உடனடியாக 8925010683 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பினால் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் இலவசமாக ஆய்வு மேற்கொள்வர்," என்று தெரிவித்தனர்.  

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.  

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US