ஆவிகளிடமிருந்து தப்பிக்க 2000 கதவுகள் கொண்ட அரண்மனை.. பலரும் அறியாத திகில் உண்மை
கலிபோர்னியாவில் இருக்கும் வின்செஸ்டரால் என்ற மர்ம அரண்மனையைக் குறித்து காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வின்செஸ்டர் மர்ம அரண்மனை
இந்த உலகம் முழுவதும் மர்மம் நிறைந்த பல இடங்கள் இருப்பது நாம் அறிந்ததே... மர்மம் என்றால் நம் நினைவிற்கு வருவது பெர்முடா முக்கோணம் என்பதே.
சொந்தமாக வீடு கட்டும் போது தனக்கு பிடித்தமானதாகவும், தன்னுடைய வசதிக்கு ஏற்பவும் தான் கட்டுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் உயிர் பயத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
வில்லியம் வின்செஸ்டர் (William Winchester) என்ற கண்டுபிடித்த தொடர்ந்து சுடும் துப்பாக்கி ஒன்று அமெரிக்க சிவில் வார் போர்கலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
இதனால் விரைவில் பணக்காரரான வில்லியம் வின்செஸ்டர் சாரா என்பவரை 1862ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு Annie என்ற பெண் குழந்தை பிறந்து ஆறு வயதில் இறந்துள்ளது.
இதனால் சோகத்தில் இருந்த இந்த தம்பதிகள் அதிலிருந்து மீள்வதற்கு சாரா தனது கணவர் வில்லியமை பறிகொடுத்தார். ஆம் காசநோய் ஏற்பட்டு வில்லியம் உயிரிழந்தார்.
இந்த இறப்பிற்கு பின்பு மிகவும் கஷ்டப்பட்ட இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் என்ற இடத்தில் 162 ஏக்கர் பரப்பளவு உள்ள ஒரு பெரிய இடத்தை வாங்கி அதில் உடனடியாக வீடு கட்டும் பணியை துவங்குகிறார் சாரா வின்செஸ்டர்.
அப்படி கட்ட துவங்கப்பட்ட வீடு சாரா அவர்கள் இறக்கும் வரை கட்டப்பட்டு கொண்டே இருந்தது அதற்காக எப்போதும் ஒரு கட்டுமான நிறுவனம் சாரா வீட்டிலே தங்கி இருந்தார்கள்.
இவ்வாறு கட்டப்பட்ட வீட்டில் பல மரமான இடங்கள் உள்ளது. அந்த வீட்டில் மொத்தம் 160 அறைகள் 6 சமையல் அறை 13 கழிவறை 2000 கதவுகள் 3 மின்துக்கி 10000 ஜன்னல்கள் 17 சிம்னிகள் இன்னும் கணக்கில் வராத பல அறைகள்...
இதுமட்டுமில்லாமல் அறைகள் இல்லாத கதவுகள் அதாவது அந்த கதவுகளை திறந்தால் உள்ளே வெறும் சுவர் மட்டுமே இருக்கும், வழியே இல்லாத படிக்கட்டுகள், திருப்ப திருப்ப ஒரே இடத்திற்கு கொண்டு வந்து விடும் அமைப்புகள் ஒரு அறைக்குள் சென்றால் அதன் வழியாக 40-50 அறைகளுக்கு செல்லும் வழிகள் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகமுடியுமாம்.
மர்மங்கள் நிறைந்த இந்த அரண்மனையினைக் குறித்து கீழே உள்ள காணொளியில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |