300 ஆண்டு பழமையான மம்மி கண்டுப்பிடிப்பு! கடற்கன்னியின் இறைச்சியை உண்டால் சாகாவரமா?
பொதுவாக மம்மி என்பது பல ஆண்டுகளுக்கு முன், பாதுகாக்கப்பட உயிரினத்தின் சடலத்தை குறிப்பதாகும். இந்த உடல்கள், இயற்கையாகவே பல காரணங்கள் கொண்டு பாதுகாக்கப்படுவதும் உண்டு.
அப்படியுள்ள அழியாத நிலையில் இருக்கும் மனித மற்றும் விலங்குகளின் மம்மிகளை உலகெங்கிலுமுள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜப்பான் நாட்டின் பிசிபிக் கடல் பகுதியிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே ஒரு மம்மி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி. இது பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே இருக்கிறது.
இது வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது. 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதைப்பற்றி, ஜப்பானின் அச்சாகி ஷிம்புன் வெளியிட்டுள்ள தகவலின் படி, சில ஆண்டுகளுக்கு முன், இந்த மம்மி பிசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அதில் சிக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைக் கைப்பற்றிய மீனவர்கள், அதனை தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கோவில் ஒன்றில் இதனை வைத்துள்ளனர். இந்த மம்மிக்கு கூர்மையான பற்கள் உள்ளது.
தலையில் முடி, புருவம் மற்றும் கண்கள் ஆகியவை உள்ளன. மேலும், மம்மியின் மேற்பகுதி, மனிதனின் முக அமைப்போடும், கீழ்ப்பகுதி செதில்களுடன் கடற்கன்னியை போன்றும் காணப்படுகிறது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளது என்றும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம் இந்த மம்மியின் இறைச்சியை சாப்பிடுவர்களுக்கு சாகாவரம் கிடைக்கும் எனவும், கூறப்படுகிறது.
இதேபோன்று ஒரு பெண் கடற்கன்னியின் மாமிசத்தை சாப்பிட்டு 800 ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார்