பூமிக்கு அடியில் அதிசய உலகம் எங்கு உள்ளது தெரியுமா?
உலகத்தில் நாம் அறிந்தவற்றை தவிர நாம் அறியாதவை நிறைய உள்ளன. பல பல அதிசயங்களை இந்த உலகம் தனக்குள் உள்வாங்கி உள்ளது.
ஆறுகள், மலைகள், பள்ளதாக்குகள், அருவிகள் போன்ற பல இயற்கை அம்சங்களை உள்வாங்கியுள்ளது. ஆனால் பூமிக்கு அடியில் இன்னுமொரு உலகம் உள்ளது இதை யாராலும் நம்ப முடியாவிட்டாலும் இது உண்மையாகும்.
இந்த பூமிக்கு அடியில் இன்னுமொரு உலகம் என கூறப்படும் இடம் எங்கு உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹங் சன் டங்
வியட்னாமில் பூமிக்கு அடியில் 262 மீட்டரில் ஹங் சன் டங் எனப்படும் குகை ஒன்று அமைந்துள்ளது. இந்த குகை உலகிலேயே மிகப்பெரிய குகையாகும்.
இந்த குகையில் பூமிக்கு மேலே இருப்பதை போல மரங்கள், காடுகள், நதிகள் என அனைத்தும் உள்ளன. இந்த குகையை ஹோ கான் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
இவன் போங் நா கீ பேங் என்ற சர்வதேச பூங்காவில் உணவு மற்றும் மரக்கட்டைகளை தேடி அலைந்த போது அந்த சிறுவன் இந்த குகையை கண்டுபிடித்துள்ளான்.
இந்த குகைக்கு செல்லும் வழியை 2008 ம் ஆண்டு, கான் என்பவர் மீண்டும் கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் மேற்கொண்ட சில ஆய்வுகளில் அது 500 அடி அகலம் 660 அடி உயரம் மற்றும் 9 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது என்பது தெரியவந்தது.
குகைக்குள் அருவி, ஆறு, காடு உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. பறவைகள், குரங்குகள் மட்டுமன்றி மேலும் பல விலங்குகள் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா பயனிகள் சென்று வர முதன் முதலாக அனுமதி அளிக்கப்பட்டது.