முகத்திலிருக்கும் பூனை முடிகளை நீக்கும் மைசூர் பருப்பு பொடி ஃபேஸ் பேக்
பொதுவாக பெண்கள் சரும ஆரோக்கியத்தில் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.
என்ன தான் கஷ்டப்பட்டு சருமத்தை பாதுகாத்தாலும் சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.
மேலும் சில பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக கன்னங்கள், நெற்றி ஆகிய இடங்களில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு இது அழகாக இருந்தாலும் பெரும்பாலானோருக்கு அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.
இந்த பிரச்சினை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை முகத்திலுள்ள முடிகளை அகற்றி கொண்டே இருக்க வேண்டும்.
அந்த வகையில் முகத்திலுள்ள பூனை முடிகளை அகற்றுவதற்கு என்ன மாதிரியான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
முடியை நீக்கும் ஃபேஸ் பேக்
1. பப்பாளி பழத்தை மசித்து அதில் கொஞ்சமாக மஞ்சள் பொடி கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் கழுவினால் பூனை முடிகள் செல்லும். கழுவும் போது முகத்தை மசாஜ் செய்வது அவசியம்.
2. கடலைமாவு, மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு, சந்தனம், ரோஸ்வாட்டர் இவை அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவினால் முடி நீங்குவதுடன் முகத்தில் நல்ல பொலிவு கிடைக்கும்.
3. ஒரு தேக்கரண்டி தேன், எலுமிச்சை சாறு இவை இரண்டையும் சம அளவில் கலந்து காய்ந்த முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு கழுவினால் முகத்திலுள்ள முடிகள் நீங்கும். இந்த டிப்ஸை வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.
4. முட்டை வெள்ளைக்கரு, சோள மா, சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் முட்டையில் இருக்கும் வெள்ளைக்கரு முகத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
5. மைசூர் பருப்பு பொடியுடன், பால், தேங்காய் எண்ணெய் கலந்து முகத்திற்கு பேக் போட்டு நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு பின் கழுவினால் முடி நீங்கி புது பொலிவு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |