புதிய வீட்டுக்கு கோலாகலமாக குடிபோன நடிகை மைனா நந்தினி... வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபல்யமான நடிகை மைனா நந்தினி தற்போது புதிய வீடு கட்டி குடிபோன காணொளி இணையத்தில் வைரலாகி வருவருடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
மைனா நந்தினி
சரவணன் மீனாட்சி தொடரின் ஒரு பாகத்தில் நந்தினி மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதனால் நந்தினிக்கு முன்பு மைனா அடைமொழியாகவே மாறிவிட்டது.

அதனை தொடரந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பி வருகின்றார்.யோகேஷ்வரன் என்பவரை திருமணம் செய்த நந்தினிக்கு ஒரு மகனும் உள்ளார்.

சொந்த வீடு
அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுக்கும் போட்டோஸ், வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது, யூடியூபில் போடுவது என இருப்பார்.

இந்த நிலையில் நடிகை மைனா நந்தினி புதிய வீடு ஒன்றை வாங்கி குடியோயுள்ளார். குடும்பத்துடன் கோலாகலமாக தனது புதிய வீட்டிற்கு பூஜை செய்து குடிபோயுள்ளதுடன் குறித்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |