மட்டன் சாப்பிடும் போது மறந்தும் இதை சாப்பிடாதீங்க... உடம்பிற்கு தீங்கு ஏற்படுமாம்
மட்டன் போன்ற அசைவ உணவுகளுடன் சாப்பிடக்கூடாத உணவுகளையும், அதன் காரணத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவுகளுடன் சில உணவுகளை நாம் சாப்பிடும் போது அது உடம்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆதலால் அசைவத்துடன் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவுடன் இதை சாப்பிடாதீங்க
பால் சார்ந்த உணவுப் பொருட்களுடன் அசைவ உணவை சாப்பிடக்கூடாது. சாக்லேட் கலந்து பால் குடிப்பதோ அல்லது பால் குடித்த பின்பு சாக்லேட் சாப்பிடுவது கூடாது.
பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான கோளாறு, வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும்.
ஆரோக்கியமான காயான பீன்ஸ் உடன் அசைவ உணவாக சிக்கன், மட்டன், மீன், பீப், முட்டை இவற்றினை சாப்பிடக்கூடாது.
கீரையுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை செரிமானத்திற்கு பிரச்சனை ஏற்படுத்தும்.
கருவாடு சாப்பிடும்போது தயிர் உண்ணக் கூடாது. சூட்டை கிளப்பும் உணவை உண்ணும்போது குளிர்ச்சியான உணவுகளை நிச்சயம் தவிர்க்கவேண்டும். தயிருடன் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மீன் குழம்பு நல்லெண்ணெய்யில் சமைத்தால் கூடுதல் சுவை கொடுத்தாலும், நல்லெண்ணெய் மீன், இறைச்சியை சமைத்து சாப்பிடுவது கூடாது. இதே போன்று முள்ளங்கியுடன் மீன் சாப்பிடக்கூடாது. இறைச்சி சமைக்கும் போது வினிகரையும் சேர்க்கக்கூடாது.
மட்டனுடன் பால் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டும் புரதச்சத்து நிறைந்துள்ள நிலையில் செரிமான மற்றும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், வயிற்றில் வீக்கம், மந்தம், வாயு, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |