மருத்துவ குணம் கொண்ட பாதாம் பிசின்! எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக்கப்படுகிறது?
பாதாம் பிசின் பாதாம் மரத்தில் வடியும் சாறில் இருந்து எடுக்கப்படுவதாகும். இந்த சாற்றை உலர்த்தி பிசினாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதில் பல எண்ணற்ற மருத்துவங்களை கொண்டுள்ளது. இந்த பிசின் பழுத்து மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்படும். இது பண்டைய காலம் தொட்டு சீனா மற்றும் இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த பிசினை சாப்பிடுவதால் உடலில் பல நோய்களை இது குணமாக்கும். இதை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாம் பிசின்
பாதாம் பிசின் உடலில் இருக்கும் அதிகமான ஊட்டச்சத்தை உறிஞ்ச உதவுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறந்த செரிமானத்திற்கு உதவுவது மட்டுமன்றி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
வயிறு உப்புசத்தை இது சிறந்த மருந்தாக உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் காணப்படுகின்றது. உடல் எடை குறைப்பதில் இது பெரும் பங்காற்றும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க இந்த பாதாம் பிசின் உதவுகிறது.
கொலஸ்ட்ராலை ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதில் இருக்கும் சேர்மானங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணத்தால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
பாதாம் பிசினில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் அதிகப்படியான புரதச்சத்து இருப்பதால் நமது எலும்பை வலுவாக்க பயன்படும். இதை பெரியவர்கள் எடுத்துக்கொள்வது நன்மை தரும். ஆண்கள் விந்தணு குறைபாட்டால் சிரமப்பட்டால் இந்த பாதாம் பிசின் தீர்வு கொடுக்கும்.
இதற்கு காரணம் இதில் இருக்கும் அதிக்கப்படியான ஜிங்க் என்ற பதார்த்தம் தான். இது ஆண்களின் விந்தணு குறைபாட்டை நீக்கி அவர்களது ஆண்மை அதிகரிக்கும். உடலில் வெப்பம் அதிகமாக இருப்பவர்கள் பாதாம் பிசின் சாப்பிடுவத நல்லது. இது உடலின் வெப்பத்தை குறைக்கும். இது நீர் கடுப்பு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |