மட்டன் இறைச்சி வேண்டுமா? நான் வேண்டுமா? கணவன் போட்ட கண்டிஷன்.. ட்விஸ்ட் கொடுத்த மனைவி!
சைவ உணவு விரும்பியான கணவனின் மனைவி மட்டம் சாப்பிட்டதால் கணவன் போட்ட பதிவு ஒன்று இணையத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
பொதுவாக சாப்பாடு விஷயத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான உணவுகளையே விரும்பி சாப்பிடுவார்கள். அசைவம், சைவம் என பல விரும்பிகள் இருப்பார்கள்.
இதனிடையே நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஸ்டோரி ஒன்று வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதில், சைவ உணவு பிரியரான அந்த நபர், அசைவ விரும்பியான காதலியை காதலித்து வந்துள்ளார்.
அசைவ உணவை சாப்பிட்டால் உன்னை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என காதலன் கூற, இதனால் மனம் வருந்திய அந்த பெண் அசைவ உணவை சாப்பிடமாட்டேன் என கூறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, திருமணம் ஆன சிறுது நாட்களில், மனைவி மட்டன் சாப்பிடுவில்லை என நினைத்துகொண்டிருந்துள்ளார். ஆனால், அவர் மட்டன் சாப்பிடுவதை தொடர்ந்து செய்துள்ளார்.
இதனால், கடுப்பான கணவன் ஒரு சில முறை அன்பாக கண்டித்துள்ளார். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் நான் வேண்டுமா? அல்லது மட்டன் வேண்டுமா? என மனைவியிடம் கேட்டுள்ளார்.
இதுவரை மனைவி செய்த எல்லா விடயத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கல்யாணத்துக்கு முன்பு என்னை பிடிப்பதாக சொன்னவள், இப்போது மட்டன் தான் மிகவும் பிடிக்கிறது எனக் கூறுகிறாள்.
மேலும், மட்டன் வேண்டுமா? நான் வேண்டுமா? என அவசரத்தில் கேட்டுவிட்டேன். ஒருவேளை மட்டன் தான் வேண்டும் என கூறிவிட்டால் என் கதி? என்ன ஆகும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு நெட்டிசன்கள் பதிலளித்து வருவதாவது, காதல் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது என தெரிவித்து வருகின்றனர்.
प्यार चाहिए या मटन चाहिए pic.twitter.com/JFJhRB1pbz
— ParanjoyGuhaThakurta (@paranjoygt) December 1, 2021